/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 9 இடங்களில் சோதனை சாவடி அமைப்பு
/
மாவட்டத்தில் 9 இடங்களில் சோதனை சாவடி அமைப்பு
ADDED : மார் 22, 2024 10:20 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 9 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி அடிப்படையில் வாகனங்களை சோதனை செய்கின்றனர். அதில், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாகன தணிக்கை பணியினை தீவிரப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளான செம்பாக்குறிச்சி, கூத்தக்குடி, வி.கூட்ரோடு, கருமந்துறை, வீரப்பெருமாநல்லுார், மடப்பட்டு, டி.அத்திப்பாக்கம், முருக்கம்பாடி மற்றும் மூங்கில்துறைப்பட்டு ஆகிய 9 இடங்களில் காவல்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோதனையில், மதுபாட்டில், கஞ்சா, சாராயம், குட்காபொருட்கள் இருந்தால் அவைகளை போலீசார் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட நபரை கைது செய்வர்.
அதிகளவு பணம் மற்றும் வெள்ளி நகைகள், சில்வர் பாத்திரங்கள் இருந்தால், அது குறித்த தகவலை பறக்கும் படை குழுவினர் அல்லது நிலை கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

