/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
/
ஆர்.கே.எஸ்., ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ஆர்.கே.எஸ்., ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ஆர்.கே.எஸ்., ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 08, 2024 06:39 AM

கள்ளக்குறிச்சி: இந்திலி ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் இவ்வாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜூ, இயக்குனர் மனோபாலா, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தர் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினரை உதவி பேராசிரியை மேகலை அறிமுகப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினரான கள்ளக்குறிச்சி பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார், துணை செவிலியர் பயிற்சி, சுகாதார ஆய்வாளர் பயிற்சி மற்றும் அதன் பொறுப்புகள் குறித்து பேசினார். ஹெல்த் சயின்ஸ் உதவி பேராசிரியர்கள் லோகு, ராணி, ராஜேஸ்வரி, சண்முகசுந்தரி, செல்வி பங்கேற்றனர்.
உதவி பேராசிரியை பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.