/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிரான்ஸ்பார்மரில் காயில் திருட்டு
/
டிரான்ஸ்பார்மரில் காயில் திருட்டு
ADDED : ஜூன் 10, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : கொம்மசமுத்திரத்தில் டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயிலை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த கொம்மசமுத்திரம் கிராமத்தில் கடந்த 4ம் தேதி இரவு 6வது எண் கொண்ட டிரான்ஸ்பார்மர் வழியாக செல்லும் மின்சாரத்தை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.
தொடர்ந்து, டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த 250 கிலோ எடை கொண்ட காப்பர் காயிலை திருடிச் சென்றுள்ளனர். திருடு போன காயிலின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாயாகும்.
இது குறித்து ஜி.அரியூர் உதவி மின்பொறியாளர் கலைமணி அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

