/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி, குளங்களில் வண்டல், களிமண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

ADDED : ஆக 26, 2024 05:19 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மற்றும் களிமண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உத்தரவுப்படி, நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த ஏரி, குளங்களிலிருந்து விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்ய இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏரிகளிலிருந்து இலவசமாக மண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வண்டல் மண்ணை சிலர் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மண் வெட்டி எடுக்க வழங்கப்பட்ட அனுமதி அளவுகளுடன், ஏரிகளில் மண் வெட்டி வெளியேற்றப்பட்டுள்ள அளவுகளும் ஒப்பீடு செய்ய வேண்டி இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகளிலிருந்து இலவசமாக மண் வெட்டி எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏரி மற்றும் குளங்களில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு, அரசிதழில் பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளுடன் மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மண் எடுக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.