/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
/
அரசு கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 01, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் உள்ள கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, குடிநீர், போக்குவரத்து, சாலை, பாதுகாப்பு வசதி கள் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், இக்கல்லுாரியின் பிற மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை செய்தார்.
ஆய்வின்போது, அலுவலர்கள் உடனிருந்தனர்.