/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனுக்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

ADDED : செப் 11, 2024 12:14 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களில் நிலுவை மனுக்கள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிலுவை மனுக்களில் தற்போதைய நிலை குறித்து துறை வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் பிரசாந்த் கேட்டறிந்தார். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கோரிக்கை மனுக்கள், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களில் நிலுவை மனுக்கள் தீர்வு குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
நிலுவை மனுக்களின் எண்ணிக்கை, தீர்வு காண நடவடிக்கைகள் மற்றும் கால அளவு, உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விரிவாகவும், தனித்தனியாகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண அலுவலர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்யும்போது மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் குப்புசாமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.