/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தரமான மருத்துவ சேவை கலெக்டர் உத்தரவு
/
தரமான மருத்துவ சேவை கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 26, 2025 05:15 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் சுகாதார துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் அரசு மருத்துவமனை சுகாதார சேவைகள், மகப்பேறு நலன், குழந்தைகள் நலன் மற்றும் பிற மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து மாவட்டத்தில் தேசிய தர உறுதி நிர்ணய சான்று பெற்ற மேல்நாரியப்பனுார், கச்சிராயபாளையம், சோழம்பட்டு, எறையூர், மூங்கில்துறைப்பட்டு, சீர்ப்பனத்தல், களமருதுார் ஆகிய சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல தரச்சான்று பெற்ற கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.