நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைகளால் அவதி
மடப்பட்டு மேம்பாலம் அருகே குப்பை கிடங்காக மாறி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
முருகன், மடப்பட்டு.
ஏரியில் குப்பை
சின்னசேலம் ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணன், சின்னசேலம்.
வயல்வெளி சாலை சீரமைக்கப்படுமா
சங்கராபுரம் அடுத்த பாவளம் - அரசம்பட்டு வயல்வெளி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, அரசம்பட்டு.
தண்ணீர் செல்வதில் சிக்கல்
மணிமுக்தா பாசன கால்வாயில் இருந்து திருட்டு தனமாக தண்ணீர் எடுத்து செல்லப்படுவதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
பெரியசாமி, அகரகோட்டாலம்.
சாலை மேம்படுத்தப்படுமா
கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சடையம்பட்டு சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாசிலாமணி, சடையம்பட்டு.