ADDED : ஜூலை 02, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தண்டலை கிராமத்தில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தண்டலை கிராமத்தில் பஞ்சர் கடைக்கு அருகே இருந்த நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரித்தனர்.
அதில், துப்பாக்கியின் உரிமையாளர் குறித்த தகவல் ஏதும் இல்லை. மேலும், நாட்டு துப்பாக்கி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதையடுத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.