/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
/
கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 06, 2024 05:39 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தை சேர்ந்த கலியன் மனைவி கவுரி,53; மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் சத்தியராஜ்,26; வெவ்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த 63 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவர் மீதும் கள்ளச்சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்களது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையை ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து சத்தியராஜ் கடலூர் மத்திய சிறையிலும், கவுரி வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.