/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய ரெய்டு எதிரொலி டாஸ்மாக் சரக்கு விற்பனை 'ஜோர்'
/
கள்ளச்சாராய ரெய்டு எதிரொலி டாஸ்மாக் சரக்கு விற்பனை 'ஜோர்'
கள்ளச்சாராய ரெய்டு எதிரொலி டாஸ்மாக் சரக்கு விற்பனை 'ஜோர்'
கள்ளச்சாராய ரெய்டு எதிரொலி டாஸ்மாக் சரக்கு விற்பனை 'ஜோர்'
ADDED : ஜூன் 25, 2024 06:06 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய பலியை தொடர்ந்து போலீசார் நடத்தி வரும் சாராய வேட்டையால் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் இதுவரை இறந்தனர். இச்சம்பவம் தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயத்தின் பிறப்பிடமாக உள்ள கல்வராயன் மலையில் போலீசார் சல்லடை போட்டு சாராய ஊறல் மற்றும் அதன் தயாரிப்பு மூலப் பொருட்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்களும் தினமும் பாக்கெட் சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் வேறு வழியின்றி டாஸ்மாக் சரக்கை வாங்கி குடிக்க அரசு மதுபான கடைக்கு படையெடுக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் டாஸ்மார்க் சரக்கு விற்பனை அதிகரித்துள்ளது.