/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வழக்கில் 7 பேரின் காவல் நீட்டிப்பு
/
கள்ளச்சாராய வழக்கில் 7 பேரின் காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 18, 2024 10:55 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி வழக்கில் கைதானவர்களில், 7 பேரின் நீதிமன்ற காவல் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 67 பேர் இறந்தனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில், தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன், வேலு ஆகிய 7 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 7 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், 7 பேரின் நீதிமன்ற கவலை வரும் 31ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.