நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரின் பாரம்பரியம், மக்கள் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதை தலைமை இடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க கோரி, பஸ் நிலையம் அருகில் பல்வேறு கட்சிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், பழனி, பழனிச்சாமி, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் காமராஜ், பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மேலும் த.மு.மு.க., மாவட்ட செயலாளர் பசல் முகமது, வி.சி., நகர செயலாளர் சத்யதாஸ், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேகர், த.வெ.க., ஒன்றிய தலைவர் மணிமாறன், காங்., நகர தலைவர் கதிர்வேல், செயற்குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.