ADDED : ஆக 19, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வடதொரசலுாரில் வயல் ஆய்வு மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த வடதொரசலுார் கிராமத்தில் கம்பு விதைப்பண்ணை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர வயல்கள் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள வயல்களை வேளாண் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.
ஆய்வில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும், மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து அதிக லாபம் அடைவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
வேளாண் இணை இயக்குனர் அசேக்குமார், துணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் வனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேளாண் அலுவலர் முத்துராஜ் உடனிருந்தனர்.

