/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் பகுதிகளில் பால், டோக்கன் விநியோகம்
/
ரிஷிவந்தியம் பகுதிகளில் பால், டோக்கன் விநியோகம்
ADDED : ஏப் 20, 2024 05:40 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுகளை கணிசமாக பெறுவதற்காக அரை லிட்டர் பால் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீடு வாரியாக தி.மு.க., வழங்கியது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வில் மலையரசன், அ.தி.மு.க.,வில் குமரகுரு, பா.ம.க.,வில் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீசன் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியை பொறுத்தவரை தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.
இதனால் விளம்பரம் வரைய சுவர் பிடிப்பதில் இருந்து தேர்தல் தினமான நேற்று வரை ஆங்காங்கே இரு கட்சி நிர்வாகிகளிடையே பிரச்னை ஏற்பட்டது.
லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில் தலா 300 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டு பிரதான கட்சிகளும் சரிசமமான தொகையை வழங்கிய நிலையில், தங்களுக்கான ஓட்டுகள் குறைய வாய்ப்புள்ளதாக தி.மு.க., கருதியது.
இதையொட்டி, தி.மு.க., சார்பில் இரண்டாவது முறையாக வாக்காளர்களுக்கு 100 வழங்கியது. இந்நிலையில், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட பகுதிகளில் பலரது வீடுகளுக்கு அரை லிட்டர் பால் மற்றும் டோக்கன் ஆகியவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டது.
தேர்தல் முடிவுக்கு பிறகு டோக்கன் கொடுத்து பணம் அல்லது பரிசுப் பொருள் பெற்றுக்கொள்ளலாம் என கட்சி நிர்வாகிகள் உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

