/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட காங்., செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்
/
மாவட்ட காங்., செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 22, 2024 12:51 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்.,கட்சி தலைவர் ராஜேஷ்குமார், அமைப்பு செயலாளர் ராம்மோகன், பொது செயலாளர் செல்வம், இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின்பிரசாத், மாநில செயலாளர் கமலிகா காமராஜ், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்று பேசியதாவது:
ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த அயராது உழைக்க வேண்டும். 57 ஆண்டுகளாக துாங்கி விட்டோம். துாங்கியது போதும், நம் தோழர்களை தட்டி எழுப்புங்கள். வாக்கு வங்கி சதவீத்தை உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் 10 இளைஞர்கள் நியமிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனப் பேசினார்.