/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
/
பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 14, 2024 06:17 AM

கள்ளக்குறிச்சி: தி.மு.க., தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாக அ.தி.மு.க.,வேட்பாளர் குமரகுரு பேசினார்.
தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு நேற்று தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
பிரசாரத்தில் வேட்பாளர் குமரகுரு பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கனிமொழி கூறினார். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர்.
மதுபான தொழிற்சாலைகளை தி.மு.க.,வினர் சிலர் நடத்தி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் அதிகரிப்பால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்' என்றார்.
ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான்பாஷா, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜவேல், ஜெயச்சந்திரன்.
பேரவை துணைச் செயலாளர் மணிவண்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் ரமேஷ், மீனவரணி செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி குமார், பாசறை செயலாளர் பரியாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சந்திரசேகர் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

