/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 27, 2024 11:09 PM

திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மணலுார்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியங்களில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.
அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மணலுார்பேட்டையில், தி.மு.க., வேட்பாளர் மலையரசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமையில், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
தொடர்ந்து ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தனர். ஒன்றிய செயலாளர் பாரதி, நகர செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

