/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்
/
தியாகதுருகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : மார் 02, 2025 04:36 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில், ஒன்றியத்தில் உள்ள கிளை மற்றும் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு, அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை தலைமையில் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கிளைகளிலும் கொடியேற்றப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.
செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் புவனேஸ்வரி, ஒன்றிய சேர்மன் தாமோதரன், அவைத்தலைவர்கள் நூர்முகமது, சாமிதுரை, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், பாலு, சண்முகம், ராமலிங்கம், தேவி, பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், கலியன், இளங்கோவன், பெருமாள், அப்துல் கபூர், இளைஞர் அணி அமைப்பாளர் முருகன், ஏழுமலை, நகர நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அருட்செல்வன், சிவக்குமார், அக்பர் உசேன், பாலாஜி, கோவி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.