ADDED : பிப் 24, 2025 01:12 AM

கள்ளக்குறிச்சி; சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மையகரத்தில் தி.மு.க சார்பில், மத்திய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வக்கீல் சங்க தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது; கல்விக்கு நிதி வழங்காமல் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது, உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்தி திணிப்பு தொடர்பான தகவல் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் சுதாமணிகண்டன், பெரியசாமி, முருகேசன், கிளை செயலாளர் மாயக்கண்ணன், சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

