
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வித்யா மந்திர் பள்ளியின் தலைவர் பாரஸ்மல் ஜெயினின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் வித்யா மந்திர் பள்ளி தலைவர் பாரஸ்மல் ஜெயின், 75; வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க ஜெய்சந்த், சுனில்குமார் மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதனையடுத்து திருக்கோவிலுார் லயன்ஸ் சங்கம், ரோட்டரி கிளப் இணைந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்களை தானம் வழங்க ஏற்பாடு செய்தனர். மருத்துவக் குழுவினர் கண்கள் தானம் பெற்றுக் கொண்டு குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்தனர். லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் ராஜாசுப்ரமணியன், ரோட்டரி கிளப் செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

