/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதையில் தகராறு; டிரைவர் கொலை
/
போதையில் தகராறு; டிரைவர் கொலை
ADDED : பிப் 25, 2025 06:56 AM
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போதையில் டிரைவரை கொலை செய்த, சக டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி அடுத்து திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் மாயவன், 47; மயிலாடுதுறை அடுத்த கெடாராம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்,45; டிரைவர்களான இருவரும், கடந்த 18ம் தேதி, சென்னையில் இருந்து அரியலுார் சிமெண்ட் கம்பெனிக்கு, லாரியில் சாம்பல் லோடு ஏற்றிக் கொண்டு, ஒரே லாரியை மாறி மாறி ஓட்டி சென்றனர்.
அன்றைய தினம் இரவு, உளுந்துார்பேட்டை பரிக்கல் அருகே கனரக வானங்கள் நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தனர். அப்போது, கெடிலம் டாஸ்மாக்கில் மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த மாயவன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து நாகராஜை தேடி வருகின்றனர்.

