/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 25, 2025 06:45 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், மதுவிலக்கு அமலாக்கதுறை டி.எஸ்.பி., அறிவழகன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.