/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
/
தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 02, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி, : வெள்ளிமலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் விவேக் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வேலுார், ஊட்டி, கொடைக்கானல் கல்வராயன்மலை என 15 மாவட்டங்களில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 312 பழங்குடியினர் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு சிறப்பு தேர்வு நடத்தி அதன் மூலம் 282 ஆசிரியர்களை தேர்வு செய்து, தொகுப்பூதிய ஆசிரியர்களாக நியமனம் செய்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.
இதனால் தொகுப்பூதிய ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வித்தரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணிபுரிய நடப்பாண்டிற்கு பணி ஆணை வழங்குவதுடன், பணி நிரந்தரமும் செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.