/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
/
விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
ADDED : மார் 05, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: பெத்தானுார் கிராமத்தில் விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பெத்தானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள், 55; மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.