/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதியனுாரில் விவசாயிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு
/
மதியனுாரில் விவசாயிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 11:49 PM

கள்ளக்குறிச்சி: திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மதியனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் லோக்சபா பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதியனூர் ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் மூலம் தேர்தல் நாள் வடிவமைத்து, விவசாய பெருமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

