ADDED : மார் 03, 2025 07:26 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லூரி தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மோகன சுந்தர் வரவேற்றார். கல்லூரி செயலாளர் கோவிந்தராஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ் சுரேஷ் வாழ்த்தி பேசினர்.
இதில் டாடா எலக்ட்ரானிக், டெல்பி, டி.வி.எஸ், வீல் இன்டியா லிமிடெட், பாக்ஸ்கான், ஓ,எல்,ஏ எலக்ட்ரானிக், அசோக் லைலேண்ட், ராசி சீட்ஸ், நோக்கியா மற்றும் பாரத் எப்.ஐ.ஹெச் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை சேர்ந்த மனித வள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, நேர்காணல் நடத்தி மாணவ-மாணவியரை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.