நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மலைப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குரும்பலுார் வடக்கு ஓடை பகுதியில் பிளாஸ்டிக் பாரல்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல்கள் போடப்பட்டிருந்த 1,600 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து, சாராய ஊறல் போட்டிருந்த தாழ்தொரடிப்பட்டு லோகநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.

