நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 1,100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாய்வென்னியூர் மேற்குமலை வனப்பகுதியில், சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த ஊறல் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பேரல்களில் இருந்த 1,100 லிட்டர் ஊறலை அதே இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை மகன் துரைசாமி என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.