நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சாராய ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, குறும்பாலுார் வனப்பகுதியில் சின்டக்ஸ் டேங்குகளில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, 4 டேங்குகளில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.