/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கச்சிராயபாளையம் அருகே விவசாயிகள் சங்க கூட்டம்
/
கச்சிராயபாளையம் அருகே விவசாயிகள் சங்க கூட்டம்
ADDED : மார் 03, 2025 07:29 AM
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஊராட்சி கிளை கூட்டம் நேற்று நடந்தது.
மாநில ஒருங்கிணைப் பாளர் முருகசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளையராஜா, வீரமணி, மனோகர், ஒன்றிய செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் தாகப்பிள்ளை வரவேற்றார்.
கூட்டத்தில் பால்ராம்பட்டு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல்.
கோமுகி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு மட்டும் பயன்படுத்துதல்.
ஏரி குளம் போன்றவற்றிற்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.