ADDED : மே 06, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் மனைவி தீபிகா, 24; இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 7 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் கரடிசித்துாரில் உள்ள தீபிகாவின் தந்தை முனியன் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்ற தீபிகா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முனியன் அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.