/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் 11 கடைகளுக்கு 'சீல்' உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

ADDED : ஜூலை 06, 2024 05:37 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதியில் குட்கா விற்ற 11 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
உளுந்துார்பேட்டை மற்றும் திருநாவலுார் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, சண்முகம், பாஸ்கர் தலைமையிலான குழுவினர் கடந்த 3 நாட்களாக திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் குட்கா விற்பது தெரியவந்தது. அதன்பேரில் 24 கடைகளில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை மற்றும் திருநாவலுார் போலீசில் புகார் அளித்ததன் பேரில் 24 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உளுந்துார்பேட்டை பகுதியில் உள்ள 5 கடைகளுக்கும், திருநாவலுார் பகுதியில் உள்ள 6 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்து, கடையின் உரிமையை ரத்து செய்தனர்.
மேலும் அந்த கடைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.