ADDED : மார் 10, 2025 12:05 AM

தியாகதுருகம்; தியாகதுருகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம், பெரியமாம்பட்டு, விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக கட்டடம் கட்ட ரூ. 12 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர்.
துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர் சிலம்பரசன், முருகன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கோமதுரை, சமுதாய பராமரிப்பு கமிட்டி இயக்குனர் நல்லாப்பிள்ளை, அண்ணாமலை, அருட்செல்வன், சரவணன், தனபால், உதவியாளர் சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.