/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள்: 'அப்சர்வர்' ஆய்வு
/
தேர்தல் கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள்: 'அப்சர்வர்' ஆய்வு
தேர்தல் கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள்: 'அப்சர்வர்' ஆய்வு
தேர்தல் கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள்: 'அப்சர்வர்' ஆய்வு
ADDED : ஏப் 01, 2024 05:17 AM

கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் செயல்பாடு குறித்து 'அப்சர்வர்' ஆய்வு செய்தார்.
லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை, சமூக ஊடக கண்காணிப்பு மையம், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் தேர்தல் கட்டுபாட்டு அறை உள்ளிட்ட கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா, கலெக்டர் ஷ்ரவன்குமார், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.