
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி இல்லாதவர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எஸ்.பி. ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கினார். இதில், 42 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.