/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
/
கள்ளக்குறிச்சியில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
ADDED : மார் 02, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடக்கும் அனைத்து நீதிமன்ற பணிகள், வழக்கு விசாரணைகள் குறித்து மாவட்ட பொறுப்பு நீதிபதியான, ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார்.
இதில் வழக்கு விசாரணைகளை நேரில் பார்வையிட்டார். மேலும் கோர்ட் கட்டடங்கள், அடிப்படை வசதிகள், தளவாட பொருட்கள், பதிவேடுகள் குறித்து ஆய்வு கொண்டார். தொடர்ந்து கோர்ட் பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி மற்றும் அரசு வக்கீல்கள் உடன் இருந்தனர்.