/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரியலுார் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
அரியலுார் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலுார் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலுார் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : பிப் 27, 2025 07:50 AM

ரிஷிவந்தியம்,; அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான 'எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம், வாங்க பேசலாம்' என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த அரியலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, முன்னாள் டி.ஜி.பி., ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஊடகவியலாளர் உமா, திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் பெருநர்கிள்ளி ஆகியோர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், பொறியியல், மருத்துவம் படிப்புகளை போல வேலைவாய்ப்புகளை தரக்கூடிய பிற படிப்புகளும், மனிதவளம், தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளும் ஏராளமாக உள்ளன.
மாணவர்கள் இதுபோன்ற படிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி முடித்ததும் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளும் நடக்கிறது. மாணவர்கள் திறம்பட படித்து, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
சி.இ.ஓ., கார்த்திகா நன்றி கூறினார்.

