/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
/
உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
ADDED : மே 13, 2024 06:10 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பன்னாட்டு பேராசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிளஸ் ௨ முடித்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முன்னாள் காவல்துறை தலைவர் திருஞானம் கல்லுாரி கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
பன்னாட்டு பேராசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லியோ ஸ்டேன்லி வரவேற்றார்.
பேராசிரியர்கள் இளையாப்பிள்ளை, பாண்டியன், வேல்ராஜ், செல்வகுமார், விஸ்வநாதன், பத்மாவதி, டாக்டர்கள் அன்பு, ஆனந்தராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நாங்குநேரி மாணவர் சின்னதுரை உள்ளிட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.