/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : மே 16, 2024 11:40 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் பழங்குடியின மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு நிறைவு செய்த பழங்குடியின மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் துரைசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சரளா, அன்னபூரணி முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகி இதயதுல்லா வரவேற்றார்.
உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தாளராக ராஜா தமிழரசன், மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் வினோதினி, ஆசிரியைகள் ஜெயந்தி, பத்மஸ்ரீ, செல்வி பங்கேற்றனர். ஏழ்மை நிலை மாணவிகள் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

