/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மடப்பட்டில் வியாபாரிகள் சங்க கொடி ஏற்றம்; அடையாள அட்டை வழங்கல்
/
மடப்பட்டில் வியாபாரிகள் சங்க கொடி ஏற்றம்; அடையாள அட்டை வழங்கல்
மடப்பட்டில் வியாபாரிகள் சங்க கொடி ஏற்றம்; அடையாள அட்டை வழங்கல்
மடப்பட்டில் வியாபாரிகள் சங்க கொடி ஏற்றம்; அடையாள அட்டை வழங்கல்
ADDED : செப் 03, 2024 11:50 PM

உளுந்துார்பேட்டை : மடப்பட்டில் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
உளுந்துார்பேட்டை தாலுகா மடப்பட்டு கிராமத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜ்முகம்மது தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சசிகுமார் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமது கனி, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில இணைச்செயலாளர் ஏழுமலை, மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைச் செயலாளர் மதியழகன், மாவட்ட பொருளாளர் சங்கர், மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சத்தியகீர்த்தி, சங்கத் துணைச் செயலாளர்கள் ராஜேந்திரசோழன், சுதாகர், மகேந்திரன், நாகப்பன், சங்கத் துணைத் தலைவர்கள் ஈசாக்முஹம்மது, முருகன், சங்க இணை செயலாளர்கள் பரணி, அன்பரசன், பழனிவேலு, பாபு, கதிரவன், ரமேஷ், சையது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் பஷீர் அகமது நன்றி கூறினார்.