/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'அ.தி.மு.க.,வை நம்பினால், ஆண்டவனை நம்புவதுபோல்': நடிகை விந்தியா பேச்சு
/
'அ.தி.மு.க.,வை நம்பினால், ஆண்டவனை நம்புவதுபோல்': நடிகை விந்தியா பேச்சு
'அ.தி.மு.க.,வை நம்பினால், ஆண்டவனை நம்புவதுபோல்': நடிகை விந்தியா பேச்சு
'அ.தி.மு.க.,வை நம்பினால், ஆண்டவனை நம்புவதுபோல்': நடிகை விந்தியா பேச்சு
ADDED : ஏப் 11, 2024 11:43 PM

கள்ளக்குறிச்சி : 'திருடனை கூட நம்பலாம், தி.மு.க.,காரனை நம்ப கூடாது' என, அ.தி.மு.க., பேச்சாளர் நடிகை விந்தியா பேசினார்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, அவர், பேசியதாவது: கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஓட்டு அளிக்க வேண்டும். தே.மு.தி.க., விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் குமரகுருவை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வை நம்பினால், ஆண்டவனை நம்புவதுபோல். ஆனால் போலி வாக்குறுதி, பொய் பிரசாரம் செய்யும் திருட்டு ஊழல் ஆட்சி செய்யும் தி.மு.க.,விற்கு ஓட்டு போடாதீர்கள்.
நயினார் நாகேந்திரனின் பணத்தை கைப்பற்றியது தி.மு.க.,தான். ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. மத்திய பா.ஜ., அரசுடன் தி.மு.க., கள்ளக்கூட்டணி வைத்து, 'டீல்' பேசிக்கொண்டு இருக்கிறது.
தி.மு.க.,காரங்க பிரசாரம் பண்ண போற இடத்தில மக்கள் விரட்டி அடிக்கராங்க. கேள்வி கேக்கராங்க. திருடனை கூட நம்பலாம். தி.மு.க.,காரனை நம்பவே கூடாது. அ.தி.மு.க, வேட்பாளர் குமரகுருவுக்கு உங்களின் ஓட்டு எனும் ஆயதத்தை பயன்படுத்தி வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.
முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பாசறை செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

