/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 21, 2024 06:50 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதுகலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், முதுகலை படிப்பின் அவசியம், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி துறைத் தலைவர்கள் பிரவீனா, சக்திபிருந்தா, நர்கீஸ்பேகம், அங்குராஜ், அகமதுசுல்தான், அருள், சித்ராதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அசோக் நன்றி கூறினார்.