/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மேல்நிலை பள்ளியில் கழிவறை கட்டடம் திறப்பு
/
அரசு மேல்நிலை பள்ளியில் கழிவறை கட்டடம் திறப்பு
ADDED : செப் 07, 2024 05:16 AM

சங்கராபுரம் : நெடுமானுர் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் கழிவரை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.
சங்கராபுரம் வட்டம் நெடுமானுர் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டம் மற்றும் தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரு.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் கழிவறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் பாக்யம் நாகராஜன் தலைமை தாங்கினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன்,குவாலிடெஸ்ட் இந்தியா நிறுவன துணை தலைவர் பிரபு லோகநாதன்,மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சிவபிரேமா வரவேற்றார்.
மாவட்ட கலைக்டர் பிரசாந்த் புதிதாக கட்டப்பட்ட கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். . விழாவில் ஊர் பொது மக்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.