/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் பகுதியில் காய்கறி விலை உயர்வு
/
சங்கராபுரம் பகுதியில் காய்கறி விலை உயர்வு
ADDED : மே 25, 2024 01:09 AM
சங்கராபுரம்: தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைவு காரணமாக சங்கராபுரம் பகுதியில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மார்க்கெட்டுக்கு பெங்களூருவிலிருந்து தினமும் லாரிகள் முலம் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கேயும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், அங்கு காய்கறி விலை உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து காய்கறிகள் சங்கராபுரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பதால் இங்கும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவிற்கு 20 முதல் 60 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கிலோ 100 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் 160 ரூபாய்க்கும், 80க்கு விற்ற கேரட் 120 ரூபாய்க்கும், 60க்கு விற்ற கத்திரிக்காய் 80க்கும், 60 ரூபாய்க்கும் விற்ற பீட்ருட் 80 ரூபாயக்கும், 30க்கு விற்ற உருளைக்கிழங்கு 60 ரூபாய்க்கும், 60 க்கு விற்ற குடைமிளகாய் 80 ரூபாய்க்கும், 100க்கு விற்ற இஞ்சி 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

