/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னம் பொருத்தும் பணி தேர்தல் அலுவலர் ஆய்வு
/
சின்னம் பொருத்தும் பணி தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : ஏப் 15, 2024 04:47 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலையொட்டி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா மூன்று சட்டசபை தொகுதி களைக் கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் நேற்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பணிகளை விரைவாக முடித்திடவும், முடிவுற்ற பின் பாதுகாப்பு அறையில் வேட்பாளர் அல்லது வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் மூடி சீல் வைத்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

