/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் இடுபொருட்கள் பெற மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்
/
வேளாண் இடுபொருட்கள் பெற மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்
வேளாண் இடுபொருட்கள் பெற மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்
வேளாண் இடுபொருட்கள் பெற மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்
ADDED : ஜூலை 06, 2024 05:30 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் இடுபொருட்களை மின்னணு பரிவர்த்தனை மூலம் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வருவாய்த்துறை மற்றும் பத்திர பதிவுத்துறையில் இருப்பது போல வேளாண் துறையிலும் மின்னணு பரிவர்த்தனை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் இருந்து விநியோகம் செய்யப்படும் விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், நுண்ணுாட்ட கலவைகள், விசைத் தெளிப்பான்கள் மற்றும் தார்ப்பாய்கள் உள்ளிட்ட அனைத்து வகையான இடுபொருட்களையும் விவசாயிகள் தற்சமயம் நேரடி பணம் பரிவர்த்தனை செய்து பெற்று வருகின்றனர்.
இதில் ஏற்படும் இன்னல்களை போக்கிடும் பொருட்டு தமிழக அரசு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொண்டு விவசாய இடுபொருட்களை வாங்கிடும் பொருட்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் தங்களிடம் உள்ள ஏ.டி.எம்., கார்டு மற்றும் யு.பி.ஐ., ஐ.டி. மூலம் எவ்வித சிரமமும் இல்லாமல் இடுபொருட்களை வாங்கி பயன்பெற முடியும். விவசாயிகள் எல்லோரும் இந்த வசதிகளை எளிதில் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மின்னணு பரிவர்த்தனை முறை வேளாண்துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தபட்டு வருகிறது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.