/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க 12டி படிவம் வழங்கல்
/
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க 12டி படிவம் வழங்கல்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க 12டி படிவம் வழங்கல்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க 12டி படிவம் வழங்கல்
ADDED : மார் 22, 2024 10:19 PM

கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் வசிக்கும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கலெக்டர் நேரில் சென்று 12டி படிவம் வழங்கினார்.
லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிசெய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுத்தியுள்ளது.
அதன்படி, 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது வீட்டில் இருந்தே அஞ்சல் வழியில் ஓட்டளிக்க வசதியாக 12டி என்ற படிவம் வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட விளாந்தாங்கல் சாலையில் வசிக்கும் 85 வயது மேற்பட்ட முதிய வாக்காளர்களுக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் 12டி படிவம் வழங்கினார்.
மேலும், படிவத்தை நிரப்பும் முறை குறித்து விளக்கி கூறி, உங்களது வீடுகளுக்கே அலுவலர்கள் நேரடியாக வந்து தபால் வாக்குகளை சேகரித்துக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
மேலும், கரியப்பா நகர் பகுதியில் வசிக்கும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளியின் வீடுகளுக்கு நேரில் சென்று 12டி படிவம் வழங்கி, கட்டாயம் ஓட்டளிக்குமாறு அறிவுறுத்தினார். இதுதவிர, ஓட்டுச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் நேரில் சென்று ஓட்டளிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

