/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 30, 2024 12:15 AM

திருக்கோவிலுார்: முகையூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா மணம்பூண்டியில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொரு ளாளர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் கலைமணி, மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் குமரகுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ஒன்றிய அவை தலைவர் விநாயகம், கல்லந்தல் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பூபதி, ஒன்றிய மாணவரணி செயலாளர் துறை, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெயசூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.