/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருட்டு
/
வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருட்டு
ADDED : பிப் 22, 2025 07:20 AM
கள்ளக்குறிச்சி; மோ.வன்னஞ்சூரில் வி.ஏ.ஓ., வீட்டிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் வினோத், 41; இவர், கீழ்பாடியில் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை 10:30 மணியளவில் அவரது மனைவியுடன் வீட்டை பூட்டி, சாவியை அருகே மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றனர். சில மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 400 கிராம் வெள்ளி பொருட்கள், 3 கிராம் தங்க காசு உட்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

